Published Date: July 27, 2024
CATEGORY: CONSTITUENCY

மதுரை மாநகரில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு.
மதுரை மாநகரில் மண்டலம் மூன்றுக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோவில் தளவாய் அக்ரஹாரம், வடக்கு மாசி வீதி, பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிந்த மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல்வேறு திட்ட பணிகள் குறித்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
இதில் தமிழ்நாடு மின்வாரியம் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதிகளில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவ்வை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் NNTசமூகப் பொறுப்பு நிதியில் கீழ் 124 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வடக்கு மாசி வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் சூப்பர் சக்கர் வாகனம் மூலம் சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் வணிக வளாக கட்டிடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாக கட்டடத்தை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து மதுரை வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மேடை அமைக்கும் பணியினை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஆரப்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியை ஆய்வு செய்தார்.
Media: Tamil Sudar